Friday, August 4, 2023

                                         சிறப்பான செயலாக்கத்திற்கு 

            புற  காரணங்கள் தடையாக 

                                                              இருக்க முடியாது.

                                 வெளி     உலகத்திற்கு விளம்பரப்படுத்தும் 

                                                     "அகத்  தூண்டுதல் பூங்கா."

       திருவாரூர் மாவட்டம்  சன்னாநல்லூர் கிராமத்தில் "அகத்  தூண்டுதல் பூங்கா " ( Inspirational Park ) என்ற  அமைப்பு 2012 ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது.மேலே தலைப்பில் விளக்கியிருப்பதுபோல் ஒரு மனிதனின் வெற்றி தோல்வி அவனுடைய உடல்,மன  ,உளவியல்  பலம் மற்றும் அவனது வைராக்கியம்  ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது என்பதை எடுத்துக்காட்டி இன்றைய இளைய சமுதாயத்தினரை இந்தியாவின் பாரம்பரிய பெருமையை உலகறியச்செய்யும் முயற்சியாகும்.

                                       இந்த கிராமத்தில் ,ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து,பொறியியல் படித்து தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 1961ல்  பொறியாளராக இருந்தவர் பாவாடைகணேசன்.பொருளீட்டுவதிலேயே ஆர்வமில்லாமல் சிறப்பாகச் செயாற்றுவதிலேயே விரும்பிய காரணத்தால் வாங்கிய சம்பளத்தை வெட்டாற்றில் வீசியெறிந்துவிட்டு 1963ல் வேலையை ராஜினாமா செய்தார்.அவருடைய உயர் அதிகாரி ராஜினாமாவை ஏற்காமல் சீனப்  போரின் காரணமாக  ஏற்பட்ட "அவசரகால நிலையை "நினைவுபடுத்தி அவரை இராணுவத்தில் சேர ஊக்குவித்தார்.

                     1964ல் இராணுவ அதிகாரியாகக் கமிஷன் பெட்ரா அவர் 1965,மற்றும் 1971 இரண்டு போர்க்களங்களில் பங்கு பெற்றார்.மிகச்சிறந்த அதிகாரி என்று பெயரெடுத்திருந்த அவர் 1987ம் ஆண்டு இந்திய தென்துருவ ஆய்வு தளத்திற்கு தலைவராக தேர்வு பெற்றார்.

                                    சன்னாநல்லூர் மண்ணை தென் துருவத்தில் தூவி தனது பணியை ஏற்ற அவர் 1989ல் பனி முடிந்து திரும்புகையில் அங்கு சுமார் 50 கோடி வருடங்களுக்கு மேலாக உறைபணியில் கிடைக்கும்  சில கற்பாறைகளை தமிழகம் கொண்டுவந்தார்.

              இவற்றில் ஒன்றுதான் சன்னாநல்லூரில்  நிறுவப்பட்டுள்ளது.இது கணேசனின் பிறந்த ஊர் என்பதால் இங்கு தனது  ஓய்வூதியத்தின்  பெரும் பகுதியை செலவிட்டு தனது சொந்த நிலத்தில் ஒரு நூலகம்,ஒரு பயிற்சி மையம்,மாற்றும்  சக்தி பீடம் என்று பெயரிடப்பட்ட அண்டார்க்டிகா கல் ஆகியவை உள்ளன.

               அவ்வப்பொழுது உந்துசக்தி முகாம் நடைபெறுகிறது. சன்னாநல்லூரின் சுற்று வட்டார கல்விக் கூடங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள்,ஆசிரியர்கள்,மற்றும் பொதுமக்கள் பயன் பெறுகிறார்கள்.

                             இந்த  அமைப்பின் நோக்கம்,எப்படி கணேசன் தனது சுய சிந்தனை அதன் காரணமாக செயலாக்கம்  மற்றும் தன்னலமற்ற  நாட்டுப்பற்று போன்ற காரணிகளால் பணியாற்றுகிறாரோ அப்படி இன்றைய இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் என்பதே.இதன் காரணமாக இந்த சுற்று  வட்டார பகுதியிலிருந்து வருங்காலத்தில் சில மா மனிதர்கள்,உலக மகா  உத்தமர்கள் உருவாவார்கள் என்று பார்த்து பார்ப்போம்.

             கர்னல் கணேசன் தொடர்புக்கு;

                             Colonel P.Ganesan,V S M

                                 943,H Block,17 th Main Road,Annanagar,Chennai-600 040.

                                 cell-9444063794,9884060671,044-26163794.

                                     e mail-pavadai.ganesan@gmail.com

                              Web site-pavadaiganesan.com












No comments:

Post a Comment