காக்கை உட்கார.........பனம்பழம் வீழ.....
( சில நிகழ்வுகள்........சில விளைவுகள்......)
திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரில் பிறந்து வளர்ந்து வந்த எனது வாழ்வில் சில அசாதாரண நிகழ்வுகள் நடந்துள்ளன.அவைகள் எனது மனதில் சில உண்மைகளப் பதிவிட்டிருக்கின்றன.
எண்ணங்களின் சீரமைப்பு எதேச்சையாக நடந்து எனது வாழ்க்கை சரியானதடத்தில் செல்ல உதவியிருக்கின்றன. இவைகள் இதை வாசிப்பவர்களுக்கும் உதவும் என்பதால் அவைகளை இங்கே பதிவிடுகிறேன்
1.கிணற்றில் வீழ்ந்தது.
நாலைந்து வயது சிறுவனாக இருந்தபொழுது சுமார் 10-15 அடி ஆழ கிணற்றில் வீழ்ந்துவிட்டேன். நீச்சல் தெரிந்திருந்ததால் மேலே நின்றுகொண்டிருந்த அண்ணனால் காப்பாற்றப்பட்டேன்.
இளம் வயதில் நீச்சல் தெரிந்திருப்பதும் சுறு சுறுப்பாகவும் இருப்பது அவசியம்.
2.தண்ணீர் விளையாட்டு.
கிராமத்து சிறுவர்களிடையே தண்ணீரில் விளையாடுவது சர்வ சாதாரணம்.இந்த விளையாட்டு ஒரு முறை வினையாகி இன்னொரு சிறுவனை விரட்டிக்கொண்டு தண்ணீரில் சுற்றிச்சுற்றி நீந்தி நடு குளத்தில் அவனைப்பிடித்து தண்ணீருக்குள் அமுக்குக்கிப்பிடிக்கிறேன் .அவன் திமிரத்திமிர அமுக்கியபொழுது "அவன் இறந்துவிட்டால்....."என்ற எண்ணம் எழ அவனை விட்டுவிடுகிறேன். அன்று அவன் இறந்திருந்தால் ..........
சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளியில் நான் .........
3.நாவல் மரத்திலிருந்து வீழ்தல்
மரம் ஏறுதல் ,உச்சி மரம் வளையும்போது அடுத்தமரத்திற்கு தாவுதல் போன்றவை எனது இளமை விளையாட்டு.ஒருமுறை நாவல் மர உச்சி கிளையில் நின்றுகொண்டு மேல் கிளையைப்பிடித்து உலுக்குகிறேன் .மரம் ஏறத்தெரியாத சிறுவர்கள் கீழே சுட்டப்பழம் சாப்பிடுகிறார்கள்.இந்நிலையில் திடீரென்று இரண்டு கிளைகளும் முறிந்து நான் கீழே விழுகிறேன் .கையில் பிடித்திருந்த கிளையை விடாததால் அது கீழே மற்றோரு கிளையில் மாட்டிக்கொள்ள நான் அப்படியே தாவிப்பிடித்து சர்வ சாதாரணமாக மரத்திலிருந்து இறங்குகிறேன்.
அன்று நான் சுமார் 15-20 அடி உயரத்திலிருந்து விழுந்திருந்தால் .........
4.சமையலும் நானே .....சாப்பிடுவதும் நானே.......
எஸ் எஸ் எல் சி தேர்வுகள் எழுதுகிறேன்.அம்மா தஞ்சாவூர் மருத்துவ மனையில்.வீட்டில் தங்கை மட்டுமே பெண்.காலை 4 மணிக்கு எழுந்து சமையல் முடித்து 5 கி.மீ தூரத்தில் உள்ள பள்ளிக்கு ஓடி காலைத் தேர்வு எழுதுகிறேன்.பக்கத்து கோவிலில் உட்கார்ந்து தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு பகல் 2 மணிக்கு அடுத்த தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு ஓடுகிறேன்.தேர்வு முடிந்து வீட்டில் ஆடு மாடுகள் மேய்த்துக்கொண்டு விவசாய வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அன்று நான் தேர்வில் தோற்றுப்போயிருந்தால் ............
5.பதினாறு வயதில் கல்லூரி விடுதி வாழ்க்கை.

No comments:
Post a Comment