காக்கை உட்கார ........பனம்பழம் வீழ .... (தொடர்கிறது )
5. மாணவர் விடுதி வாழ்க்கை
1958 ம் வருடம் மே மாதம் போல் நான் அன்றைய ராமநாதபுர மாவட்ட செட்டிநாடு என்ற இடத்தில் உள்ள "அண்ணாமலை பாலிடெக்னீக்" கில் மூன்றாண்டுகால பட்டய படிப்பில் சேர்ந்து விடுதி மாணவனானேன் .
கிராமப்புறத்திலிருந்து வந்ததால் படிப்பு,விளையாட்டு தவிர நண்பர்களுடன் அரட்டை,ஊர் சுற்றுதல் போன்ற பழக்கங்கள் மனதில் பதியவில்லை.நட்பின் இலக்கணம் தெரிந்திருந்தும் நல்ல நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளவில்லை.இப்படியே மூன்றாண்டு காலம் ஓடிவிட கடைசி ஆண்டு இறுதித்தேர்வு எழுதினோம்.
தேர்வின் முடிவு வந்தபொழுது பெரும் அதிர்ச்சியைத்தந்தது.
எங்கள் பாலிடெக்னீக் முற்றிலும் இடம்பெறவில்லை.பெருமளவு காப்பியடித்திருப்பது தெரியவந்து ஒருமாதத்தில் எங்களுக்கு திரும்பவும் தேர்வும் ,திருச்சியில் எழுதவேண்டும் என்றும் சொன்னார்கள்.திருச்சியில் எங்கள் அக்காள் வீடு இருந்தது.அங்குபோய் தங்கி தேர்வு எழுதினேன்.தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து ஆடு மாடுகள்,வீட்டுவேலை என்று நாட்கள் ஓடியது.ஒருநாள் மாலை வேளையில் பக்கத்து வீட்டு பையன் எதோ தேர்வு ரிசல்ட் அன்றைய பேப்பரில் வந்திருப்பதாகச் சொன்னான்.அங்கும் இங்கும் ஓடி பேப்பர் கிடைத்துப் பார்த்தால் முதல் வகுப்பில் தேர்வு பெற்றிருந்தேன்.74 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 10 பேர் ,3 முதல் வகுப்பு,7 இரண்டாம் வகுப்பு பாஸாகி இருந்தார்கள்.
அடுத்த இரண்டு மூன்று நாட்களில் சுமார் பத்து விதமான அமைப்புகளிலிருந்து என்னை வேலையில் சேர உத்திரவு வந்தது.கடலூரிலிருந்து பெரிய அண்ணன் வந்து எல்லாவற்றையும் பார்த்து பொதுப்பணி துறை தேர்வு செய்து 15 ஆகஸ்ட் 1961 பட்டுக்கோட்டையில் அரசாங்க வேளையில் சேர்ந்தேன்.
அன்று நான் தேர்வாகாமல் போயிருந்தால்.......
6.பணம் சம்பாதிப்பதுதான் வாழ்க்கையா ?